ஆந்திரப் பிரதேசத்தில் இடைவிடாத மழைக்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளம் போன்ற நிலைமை காரணமாக, உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இந்திய கடற்படை விமானங்கள், வெள்ள நிவாரணக் குழுக்கள் மற்றும் நீர்மூழ்கி குழுக்கள், மாநிலத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் அதிகரிக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நான்கு ஹெலிகாப்டர்கள் (02 ஏஎல்எச் & 02 சேதக்) மற்றும் ஒரு டோர்னியர் விமானம் தேடல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை சிக்கித் தவித்த 22 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கித் தவித்தவர்களுக்கு 1000 கிலோவுக்கும் அதிகமான உணவு விமானம் மூலம் வீசப்பட்டுள்ளது. மீட்பு முயற்சிகளை அதிகரிக்க 10 வெள்ள நிவாரண குழுக்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
தேவையான உதவிகளை வழங்குவதற்காக கூடுதல் கடற்படை தளவாடங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
திவாஹர்