தமிழக அரசு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு மாநிலத்தில் சிறுவர், சிறுமியர், முதியோர், அரசியல் கட்சியினர், பொது மக்கள் என அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன் கொடுமை அதிகரித்துவருகிறது.

குறிப்பாக சிறுவர், சிறுமியர், பெண்கள், முதியோர், அரசியல் கட்சியனர் என அனைவருக்குமான பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் ஒரே நாளில் 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு காரணம் சட்டம் ஒழுங்கில் கவனமின்மையே.

மேலும் நாளுக்கு நாள் போதைப்பொருட்களின் விற்பனை, பதுக்கல், கடத்தல் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கும் காரணம் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை தான்.

தவறு செய்பவர்களை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.

காவல்துறையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் 24 மணி நேரமும் தேவை.

பள்ளிக்கல்லூரிகள், விடுதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை.

லஞ்சம், ஊழல், கட்டப்பஞ்சாயத்து தொடர்வது நிறுத்தப்பட வேண்டும்.

எனவே தமிழக அரசு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக கடைபிடித்து, அனைத்து தரப்பு மக்களுக்குமான அமைதியான, நிம்மதியான, பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply