பாதுகாப்பு செயலாளர் இணைத் தலைமையில் மணிலாவில் 5-வது இந்தியா-பிலிப்பைன்ஸ் கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம்.

இந்தியா-பிலிப்பைன்ஸ் கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் (ஜே.டி.சி.சி) ஐந்தாவது கூட்டத்திற்கு இணைத் தலைமை ஏற்க பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ கிரிதர் அரமனே செப்டம்பர் 11, 2024 அன்று மணிலாவுக்கு  பயணம் மேற்கொள்கிறார். பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த துணை செயலாளர் திரு இரினியோ குரூஸ் எஸ்பினோ இந்த கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்குவார் .

இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கலந்துரையாடுவார். பிலிப்பைன்ஸ் அரசின் மற்ற பிரமுகர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.

இந்தியாவும் பிலிப்பைன்ஸும் தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளையும், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் 10 ஆண்டுகளையும் கொண்டாடும் நிலையில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

2006-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஜே.டி.சி.சி கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. JDCC கூட்டத்தின் நான்காவது பதிப்பு மார்ச் 2023-ல் புதுதில்லியில் இணைச் செயலாளர் மட்டத்தில் நடைபெற்றது. ஐந்தாவது பதிப்பு இணைத் தலைமை செயலாளர் மட்டத்திற்கு உயர்த்தப்படுவதைக் குறிக்கிறது.

Leave a Reply