முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் தமிழ்நாட்டுக்கு உலகின் 16 முன்னணி நிறுவனங்களின் ரூ.7,016 கோடி மதிப்புள்ள முதலீடுகள் ஈர்ப்பு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் மொத்தமாக ரூ.7,016 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 10.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோவில், உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பான ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

Leave a Reply