நாட்டில் பாதுகாப்பான இணையதள வெளியை உருவாக்க உள்துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில், நாட்டில் பாதுகாப்பான இணையதள வெளியை உருவாக்க உள்துறை அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்திய இணையதள குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் இந்த திசையில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று திரு அமித் ஷா ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில் கூறினார். பாதுகாப்பான இணையவழி இந்தியாவை உருவாக்கும் பணியை விரைவுபடுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டதற்காக பிரபல நடிகர் திரு அமிதாப் பச்சனுக்கு மத்திய உள்துறை அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

பிரபல நடிகர் திரு அமிதாப் பச்சன் தனது வீடியோ செய்தியில், நாட்டிலும் உலகிலும் அதிகரித்து வரும் இணையதள குற்றங்கள் கவலை அளிக்கின்றன என்று கூறினார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணையதள குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் இணையவழி குற்றங்களை தடுக்க அயராது பாடுபட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வேண்டுகோளின் பேரில் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளதாக திரு பச்சன் மேலும் கூறினார். இந்த பிரச்சினையில் இருந்து நாட்டை விடுவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கூறினார். நமது விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இணையவழி குற்றவாளிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றும்.

Leave a Reply