பல்வேறு கட்டங்களாக ஏலம் விடப்பட்டு, பணிகள் நிறைவடையும் பல்வேறு நிலைகளில் உள்ள சுரங்கங்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய, நிலக்கரி அமைச்சகம் நேற்று ஒரு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும் நியமன அதிகாரியுமான திருமதி ரூபிந்தர் பிரார் தலைமை தாங்கினார். உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதில், விரிவான மதிப்பாய்வு கவனம் செலுத்தியது. செயல்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒதுக்கீடுதாரர்களிடம் கூடுதல் செயலாளர் வலியுறுத்தினார்.
இந்த 71 நிலக்கரி சுரங்கங்களும் ஒழுங்குமுறை அனுமதி பெறுவதற்கான பல்வேறு நிலைகளில் உள்ளன. இந்த தொகுதிகள் அருணாச்சல பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஒன்பது மாநிலங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிலக்கரி சுரங்கங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்வதற்கான அமைச்சகத்தின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை இந்த நீடித்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. இந்த சுரங்கங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், உள்நாட்டு வளங்களை அதிகரிப்பதையும், நிலக்கரி இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த, நிலக்கரி அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது, இது நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கிய நாட்டின் செயல்பாட்டை ஆதரிக்கிறது.
திவாஹர்