கட்டிலில் படுத்து இருந்த நபரின் கழுத்தை துண்டித்த கொலைகாரர்கள்! -இரவு நேரத்தில் நடந்த பயங்கரம்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருச்சி -கல்லணை சாலை காவிரி ஆற்றின் வலது கரையில் சர்க்கார் பாளையம் அருகே உள்ள பனையக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மொட்டை மாடியில் மதுபோதையில் கட்டிலில் படுத்து இருந்த சுந்தர்ராஜன் என்பவரை கழுத்தைத் துண்டித்து படுகொலை செய்துள்ளனர். குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் இரவு நேரத்தில் நடந்த இக்கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பிரேதத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த சுந்தர்ராஜன் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது.

இந்த கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் தான் முழு விவரம் தெரியவரும்.

Leave a Reply