வருமானவரி அலுவலகத்தில் வரி பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வு பயிலரங்கு.

வருமானவரி செலுத்துவோருக்கு, வரி பிடித்தம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயிலரங்கு ஒன்று சென்னை வருமானவரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு வணிகப் பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

சென்னை வருமானவரி அலுவலகம், இந்திய கணக்கு மதிப்பீட்டாளர் சங்கத்துடன் சேர்ந்து இந்த விழிப்புணர்வு பயிலரங்கை நடத்தியது. பட்டயக் கணக்காளர் டாக்டர் கோபால கிருஷ்ண ராஜூ இதனை நெறியாளுகை செய்தார்.

திரு எல்.ராஜாராமன், திரு கே.செந்தில்குமார், திரு வி.தீபன் குமார் ஆகிய வருமானவரி அலுவலர்கள், வரி பிடித்தத்தை செயல்திறன் மிக்க வகையில் அமல்படுத்துதல், வரி பிடித்தம் செய்பவர்களில் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், வரி பிடித்தம் செய்வதை மீறினால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை பற்றி விளக்கி உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து வரி பிடித்தம் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு அலுவலர்கள் விளக்கமளித்தனர்.

Leave a Reply