உலகளாவிய சுகாதார அமைப்பில் ஆயுர்வேதம் முக்கிய பங்கு வகிக்கிறது – இந்த ஆண்டு ஆயுர்வேத தினம் அக்டோபர் 29-ல் கொண்டாடப்படுகிறது.

புதுதில்லி ஆயுஷ் பவனில் இன்று, 9-வது உலக ஆயுர்வேத தினம் தொடர்பான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இந்த ஆண்டு ஆயுர்வேத தினத்தின் கருப்பொருளை அறிவித்தார். “உலகளாவிய ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேதப் புதுமைகள்” என்பதே கருப்பொருள் ஆகும்.  இந்த ஆண்டு ஆயுர்வேத தினம் 2024 அக்டோபர் 29 அன்று கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வு புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.

கருப்பொருள் பல்வேறு புதுமையான நடைமுறை தீர்வுகள் மூலம் உலகளாவிய சுகாதார அமைப்பில் ஆயுர்வேதத்தின் பங்களிப்பின் திறனை எடுத்துக்காட்டும் என அமைச்சர் தெரிவித்தார். ஆயுர்வேதத்தை பிரபலப்படுத்துவதற்கு வசதியாக, நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கம் நடத்தப்படவுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா 9-வது ஆயுர்வேத தினத்தின் கருப்பொருளை எடுத்துரைத்தார்.

ஆயுர்வேத தினம் ஒவ்வொரு ஆண்டும் தன்வந்தரி ஜெயந்தி அன்று கொண்டாடப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு முதல், ‘ஆயுர்வேத தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

Leave a Reply