6-வது இந்திய-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைக் கூட்டம் – வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக அமைச்சருடன் இணைந்து தலைமை வகிக்கவுள்ளார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

2024 அக்டோபர் 2 அன்று இந்தியா-அமெரிக்கா தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்திற்கு அமெரிக்க அமைச்சர் திருமதி ரைமண்டோவுடன் இணைந்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமை தாங்கவுள்ளார். மேலும் 2024 அக்டோபர் 3, 2024 அன்று வாஷிங்டன் டிசி-யில் நடைபெறவுள்ள 6 வது இந்தியா-அமெரிக்கா வர்த்தகம் பேச்சுவார்த்தையிலும் அவர் பங்கேற்று அமெரிக்க அமைச்சருடன் இணைந்து தலைமை வகிக்கவுள்ளார்.

இதில் இரு தரப்பினரும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான வழிகள், வணிக, முதலீட்டு சூழலை மேம்படுத்துதல் மற்றும் இந்திய – அமெரிக்க வணிக சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை ஆழப்படுத்துதல் போன்றவை குறித்து விவாதிப்பார்கள்.

அமைச்சர் திரு பியூஷ் கோயல் முன்னணி அமெரிக்க – இந்திய தலைமைச் அதிகாரிகள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் கலந்துரையாடுவார். இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பரந்த வாய்ப்புகளை அப்போது எடுத்துரைப்பார்.

அமைச்சர் திரு பியூஷ் கோயலின் அமெரிக்கப் பயணம் இந்தியா – அமெரிக்கா இடையேயான வலுவான மற்றும் வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்.

அமெரிக்க வர்த்தக அமைச்சர் திருமதி ஜினா ரைமாண்டோவின் அழைப்பின் பேரில், இந்திய அரசின் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், நாளை (2024 செப்டம்பர் 30) முதல் 2024 அக்டோபர் 3 வரை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

Leave a Reply