இந்தியா-கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சி காசிந்த்-2024 ஆலியில் தொடங்கியது.

இந்தியா-கஜகஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 8-வது பதிப்பான காசிந்த்-2024, உத்தராகண்ட் மாநிலம் ஆலியில் உள்ள சூர்யா வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று தொடங்கியது. இந்த பயிற்சி, 2024 செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 13 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுப் பயிற்சி KAZIND-2024, 2016 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கூட்டுப் பயிற்சியின் கடைசி பதிப்பு கஜகஸ்தானின் ஓட்டாரில் 30 அக்டோபர் முதல் 11 நவம்பர் 2023 வரை நடைபெற்றது.

120 வீரர்களைக் கொண்ட இந்திய பாதுகாப்பு படைகள், இந்திய இராணுவத்தின் குமான் படைப்பிரிவின் ஒரு பட்டாலியன் மற்றும் பிற ஆயுதப்படையினர் மற்றும் இந்திய விமானப்படை வீரர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. கஜகஸ்தான் படைப்பிரிவினர் தரைப்படை மற்றும் வான்வழி தாக்குதல் துருப்புக்களின் பணியாளர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார்கள்.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ், மரபுக்கு கீழான சூழ்நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, இரு தரப்பினரின் கூட்டு இராணுவ திறனை மேம்படுத்துவதே இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும். இந்த கூட்டுப் பயிற்சி, பகுதியளவு நகர்ப்புற மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பில் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும். உயர் அளவிலான உடல் தகுதி, தந்திரோபாய மட்டத்தில் செயல்பாடுகளுக்கான ஒத்திகை, மெருகேற்றுதல் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவை கூட்டுப் பயிற்சியின் நோக்கங்களாகும்.

கூட்டுப் பயிற்சியின் போது ஒத்திகை பார்க்கப்படவுள்ள தந்திரோபாய பயிற்சிகளில், பயங்கரவாத நடவடிக்கையை கூட்டாக எதிர்கொள்ளுதல், ஒரு கூட்டு கட்டளை நிலையத்தை நிறுவுதல், ஒரு புலனாய்வு மற்றும் கண்காணிப்பு மையத்தை நிறுவுதல், ஹெலிபேட் / தரையிறங்கும் இடத்தைப் பாதுகாத்தல், போரின்றி எதிரியை வீழ்த்துதல், சிறப்பு ஹெலிபோர்ன் நடவடிக்கைகள், சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், ட்ரோன்கள் மற்றும் எதிர் ட்ரோன் அமைப்புகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

கூட்டுப் பயிற்சி KAZIND-2024, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தந்திரோபாயங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளில் சிறந்த நடைமுறைகளை இரு தரப்பினரும் பகிர்ந்து கொள்ள உதவும். இது இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் தோழமையை மேம்படுத்த உதவும். இந்த கூட்டுப் பயிற்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, இரு நட்பு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும்.

Leave a Reply