வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்கள் குறித்த பிராந்திய கூட்டம்: மத்திய அமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே லக்னோவில் தொடங்கி வைத்தார்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே லக்னோவில் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பீகார், மத்தியப் பிரதேசம், தில்லி ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடனான பிராந்திய கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தொழிலாளர் சீர்திருத்தங்கள், இஷ்ரம் இணையதளம், கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை குறித்த விவாதங்களில் கூட்டம் கவனம் செலுத்தியது.

மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி கரந்த்லஜே தனது உரையில், தொழிலாளர் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக அமல்படுத்துவதில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மத்திய அரசு வகுத்துள்ள ஒட்டுமொத்த தொலைநோக்குப் பார்வையின்படி, இதில் பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும் மற்ற மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார்.

இஷ்ரம் இணையதளத்தை ஒற்றைத் தீர்வாக உருவாக்க மிகவும் தேவைப்படும் இருவழி ஒருங்கிணைப்பு செயல்முறையில் ஒரு ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை எடுக்குமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. தற்போதைய மத்திய அரசின் 100 நாட்கள் நிறைவடைந்ததையடுத்து  பத்துக்கும் மேற்பட்ட அரசு திட்டங்களுடன் இஷ்ரம்  இணையதளம் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் போது, மாநிலங்கள்  யூனியன் பிரதேசங்களின் எதிர்பார்ப்புகள் முன்னிலைப்படுத்தப்பட்டன.

வேலைவாய்ப்பு உருவாக்கம், வேலைவாய்ப்பு அலுவலகங்களை நவீனப்படுத்துதல், கல்வி நிறுவனங்களுடன் கூட்டாண்மையை உருவாக்குதல் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒவ்வொரு பிரச்னை குறித்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் இந்திய அரசு இடையே விரிவான கலந்துரையாடல் அமர்வுகளும் நடத்தப்பட்டன.

Leave a Reply