காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் காதியை ஊக்குவித்து, உள்ளூர் தொழில்துறைக்கு ஆதரவு அளிக்குமாறு வலியுறுத்தினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் இன்று திப்ருகர் மாவட்டம் நஹர்கட்டியாவில் உள்ள ஜாகரன் கடையில் கதர் ஆடைகளை வாங்கினார். சோனோவாலுடன் மாநிலங்களவை உறுப்பினர் ராமேஷ்வர் தெலியும், நஹர்கட்டியா எம்.எல்.ஏ தரங்கா கோகோயும் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு சர்பானந்த சோனோவால், “இந்தியாவின் சிறந்த புதல்வர், மகாத்மா காந்தி எப்போதும் உள்ளூர் தொழில்துறையை குறிப்பாக கைத்தறிக்கு ஆதரவளித்தார், மேலும் இந்தியாவின் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் உள்ளூர் தயாரிப்புகளை ஏற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார் 

 பிரதமர் நரேந்திர மோடியின் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுங்கள் என்ற அழைப்பு இதேபோன்ற செய்தியை எதிரொலிக்கிறது, ஏனெனில் உள்ளூர் பொருட்களை  வாங்குவதன் மூலமும், நமது உள்ளூர் தொழில்களை ஆதரிப்பதன் மூலமும் நமது உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த அற்புதமான முயற்சியை முன்னெடுத்துச் செல்ல நாம் கைகோர்ப்போம்” என்று கூறினார்.

Leave a Reply