உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய குழுவின் 77-வது அமர்வில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா உரையாற்றினார்.

“இந்தியாவின் சுகாதார அமைப்பு உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அடைவதற்கான “முழு அரசு” மற்றும் “முழு சமூகம்” அணுகுமுறையைத் தழுவுகிறது, முதன்மை சுகாதாரம் மற்றும் அத்தியாவசியச் சேவைகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் (SEARO) 77-வது அமர்வில் இன்று தொடக்க உரையாற்றிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா இதனைத் தெரிவித்தார்.

பிராந்தியக் குழு கூட்டத்தின் தொடக்க அமர்வில் அலுவலக பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, “தீர்மானங்கள் மற்றும் முடிவுகளுக்கான வரைவுக் குழுவை” நிறுவுதல், அமர்வை நடத்துவதை ஒழுங்குபடுத்த “சிறப்பு நடைமுறைகளை” ஏற்றுக்கொள்வது மற்றும் தற்காலிக நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்வது ஆகியவை இடம் பெறும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்கள் டாக்டர் ரசியா பெண்ட்சே, செஃப் டி கேபினட், உலக சுகாதார அமைப்பின் தலைமையகம்; திரு. லியோன்போ டாண்டின் வாங்சுக், பூடான் சுகாதாரத் துறை அமைச்சர்; அப்துல்லா நசீம் இப்ராஹிம், மாலத்தீவு சுகாதார அமைச்சர்; திரு. பிரதீப் பௌடெல், நேபாள சுகாதாரம் மற்றும் மக்கள் தொகைத் துறை அமைச்சர்; டாக்டர் எலியா அன்டோனியோ டி அராஜோ டோஸ் ரெய்ஸ் அமரல், சுகாதார அமைச்சர், கிழக்கு தைமூர்; திரு எம்.ஏ.அக்மால் ஹொசைன் ஆசாத், மூத்த செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், வங்கதேசம்; குந்தா விபாவா தாசா நுக்ரஹா, செயலாளர், சுகாதார அமைச்சகம், இந்தோனேசியா; டாக்டர் பி.ஜி.மஹிபால, செயலாளர், சுகாதார அமைச்சகம், இலங்கை ; இந்தியக் குடியரசுக்கான கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் தூதர் திரு. சோ ஹுய் சோல் மற்றும் தாய்லாந்தின் பொது சுகாதார அமைச்சகத்தின் துணை நிரந்தரச் செயலாளர் டாக்டர் வீரவுட் இம்சாம்ரான் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நட்டா பேசுகையில், “அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, மத்திய அரசு உலகின் மிகப்பெரிய பொது நிதியுதவி பெறும் சுகாதார உத்தரவாதத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் – ஜன் ஆரோக்கிய திட்டம் (ஏபி பிஎம்-ஜேஏஒய்) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி 120 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களை உள்ளடக்கியது, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6,000 அமெரிக்க டாலர் மருத்துவமனை காப்பீட்டு நன்மையை வழங்குகிறது. 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் இந்தத் திட்டத்தை அரசு சமீபத்தில் விரிவுபடுத்தியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். “இந்த விரிவாக்கம் 60 மில்லியன் முதியோர் உட்பட சுமார் 45 மில்லியன் குடும்பங்களுக்கு இலவச சுகாதாரக் காப்பீட்டுத் தொகையை வழங்குவதன் மூலம் பயனளிக்கும். இந்தியாவின் வளர்ந்து வரும் வயதான மக்கள்தொகைக்கு உலகளாவிய மற்றும் உள்ளடக்கிய சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

Leave a Reply