ராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய ராணுவத்தின் மூத்தத் தலைவர்களிடையே பாதுகாப்பு அமைச்சர் உரையாற்றினார்.

2024 ஆம் ஆண்டின், இரண்டாவது ராணுவத் தளபதிகள் மாநாடு, மெய்நிகர் முறையில்  2024,  அக்டோபர் 10   அன்று காங்டாக்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, இந்திய ராணுவத்தின் உயர்மட்டத் தலைமை தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகளின் அனைத்து அம்சங்கள், எல்லைகள் மற்றும் உள்நாட்டில் உள்ள நிலைமை, தற்போதைய பாதுகாப்பு நடைமுறைக்கான சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூடுதலாக நிறுவன மறுசீரமைப்பு, தளவாடங்கள், நிர்வாகம் மற்றும் மனிதவள மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளிலும்  மாநாடு கவனம் செலுத்தியது. மாநாட்டின் இரண்டாவது நாளின் முக்கிய அம்சமாக இந்திய ராணுவத்தின் மூத்த தலைவர்களிடையே பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆற்றிய உரை அமைந்திருந்தது.  கேங்டாக்கில் மோசமான வானிலை நிலவியதால், சுக்னாவில் உள்ள ராணுவ முகாமிலிருந்து பாதுகாப்பு அமைச்சரின் உரை மெய்நிகர் முறையில் நிகழ்த்தப்பட்டது.

நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய, ஊக்கமளிக்கும் அமைப்புகளில் ஒன்றான இந்திய ராணுவத்தின் மீது ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கையை பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். நமது எல்லைகளைப் பாதுகாப்பதிலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், ஒவ்வொரு தேவையின் போதும் சிவில் நிர்வாகத்திற்கு உதவுவதிலும் ராணுவம் ஆற்றி வரும் குறிப்பிடத்தக்க பங்கை அவர் எடுத்துரைத்தார். ஒவ்வொரு ராணுவ வீரரையும் அவரது பங்களிப்புக்காக பாராட்டியதோடு, தேச சேவையில் தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார். ராணுவத் தளபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாதுகாப்பு அமைச்சர், தேசத்தின், பிரதமரின் ‘பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து’ பார்வையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றதற்காக ராணுவத் தலைமையைப் பாராட்டினார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ தளபதிகள் மாநாட்டில் கலந்து கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், இந்த உயர் தலைமைத்துவ மாநாடுகள் ஆயுதப் படைகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் பயனளிக்கும் என்றார் . அதிநவீன தொழில்நுட்பத்தை உட்செலுத்துதல்,  உள்வாங்குதல் ஆகியவற்றில் இந்திய ராணுவத்தின் அணுகுமுறையை அவர் பாராட்டினார்.

உலக அளவில் ஒவ்வொருவரையும் பாதிக்கும் தற்போதைய சிக்கலான, தெளிவற்ற உலக நிலைமை குறித்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சர், “இணையப் போர் உட்பட வழக்கத்திற்கு மாறான, சமச்சீரற்ற போர்முறை எதிர்காலப் போர்களின் ஒரு பகுதியாக இருக்கும், என்றும்  உலகின் பல்வேறு பகுதிகளில்  நடக்கும் மோதல்களில் இது தெளிவாகத் தெரிகிறது என்றும் குறிப்பிட்டார். உத்திகளை வகுக்கும்போது ஆயுதப்படைகள் இந்த அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சேதக் கட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கு, நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் நடந்த உலகளாவிய நிகழ்வுகளை உள்ளடக்குவதற்கு நாம் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். விழிப்புடன் இருங்கள், தொடர்ந்து நவீனப்படுத்துங்கள் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply