இந்தியாவில் இருந்து பரந்த அடிப்படை ஏற்றுமதிகளுக்கு, இந்திய அரசாங்கத்தின் வர்த்தகத் துறை, 09 அக்டோபர் 2024 அன்று டெஹ்ராடூனில் ஒரு தொழில் தொடர்புக் கூட்டத்தை நடத்தியது. இந்த நிகழ்விற்கு வணிகச் செயலர் ஸ்ரீ சுனில் பார்த்வால் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த தொழில் தொடர்பு சந்திப்பு, இந்திய அரசு, உத்தரகாண்ட் அரசு அதிகாரிகள், முக்கிய தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் இடையே ஆக்கபூர்வமான உரையாடலை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
பொது மற்றும் தனியார் பங்காளிகளின் சங்கமமான இந்த நிகழ்வானது, உத்தரகாண்டின் வேளாண் வணிகம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி துறைகளின் திறனைத் திறக்கும் நோக்கத்தில் அர்த்தமுள்ள உரையாடலை எளிதாக்கியது. கூட்டாளிகள் உத்தரகாண்டின் வளமான விவசாய-காலநிலை நன்மைகளின் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் இந்தியாவின் விவசாய ஏற்றுமதிகளை முன்னேற்றுவதில் அதன் பங்கை வலியுறுத்தினர். அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவு முக்கிய கொள்கை தலையீடுகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாநிலத்தின் ஏற்றுமதி சுற்றுச்சூழல் அமைப்பில் நிலையான வளர்ச்சியை இலக்காகக் கொண்ட முன்முயற்சிகள் மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டது.
எம்.பிரபாகரன்