எல்லை சாலைகள் அமைப்பின் சார்பில் ரூ. 2,236 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 75 உள்கட்டமைப்புத் திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று ரூ.2,236 கோடி செலவில் எல்லை சாலைகள் அமைப்பின் 75 சாலை, பாலத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மொத்தமாக, அந்தமான் – நிக்கோபார் தீவுகள் உட்பட நாட்டின் 11 எல்லைப்புற மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் ரூ. 731.22 கோடி மதிப்புள்ள 7 சாலை மற்றும் 12 பாலத் திட்டங்கள் இதில் அடங்கும். மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விழாவில் காணொலி மூலம் விழாவில் பங்கேற்றார்.

மேற்கு வங்க மாநிலம் சுக்னாவில் எல்லை சாலைகள் அமைப்பு சார்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்புத் துறை அமைச்சர் 22 சாலைகள், 51 பாலங்கள் 02 இதர திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்த உட்கட்டமைப்பு திட்டங்கள் மிகவும் சிக்கலான இடங்களில் சவாலான வானிலை சூழல்களில்  கட்டப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜ்நாத் சிங், இந்த சாலைகள், பாலங்கள் உரிய காலத்தில் கட்டி முடிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் தொலைதூரப் பகுதிகளில் இணைப்பை ஏற்படுத்துவதில் எல்லை சாலைகள் அமைப்பான பிஆர்ஓ-வின் உறுதிப்பாட்டைப் பாராட்டினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பிஆர்ஓ, ரூ .16,000 கோடிக்கும் அதிகமான செலவில் 450 உள்கட்டமைப்பு திட்டங்களை முடித்துள்ளது என்றும், இந்த ஆண்டில், இந்த 75 உள்கட்டமைப்பு திட்டங்களை பிஆர்ஓ தேசத்திற்கு அர்ப்பணித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

சிக்கலான நிலப்பரப்பு, கடுமையான வானிலை, குறைந்த ஆக்ஸிஜன் அளவு, கடுமையான குளிர் உள்ள உயரமான பகுதிகளில் 40 சதவீதத்து க்கும் அதிகமான சாலைகளை அமைப்பதில் பிஆர்ஓ-வின் முயற்சியைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

Leave a Reply