கிழக்கு கடற்படை கமாண்டால் ஒருங்கிணைக்கப்பட்டு விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 09 முதல் நடைபெற்றுவரும் பலதரப்பு கடல்சார் பயிற்சியான மலபார் 2024-ன் துறைமுக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பல்வேறு கூட்டு நிகழ்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளில் முக்கிய தலைமைத்துவ ஈடுபாடு, நிபுணர் பரிமாற்றம் , கப்பல்களுக்கிடையே பயணம், விளையாட்டுப் போட்டிகள் படகோட்டத்திற்கு முந்தைய விவாதங்கள் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், நட்புறவை உருவாக்குதல் மற்றும் செயல்பாட்டு ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இதில் பங்கேற்கின்றன.
கிழக்கு கடற்படை கமாண்டின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீஃப் வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்துர்கர் , அமெரிக்க பசிஃபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லர், ஜப்பானின் தற்காப்பு கடற்படையின் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் கட்சுஷி ஓமாச்சி, ஆஸ்திரேலிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் கிறிஸ் ஸ்மித் ஆகியோர் இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தில் பரஸ்பர கடற்படை இயங்குதன்மை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் பற்றி விவாதிக்க சந்தித்தனர்
ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த குழுவினர் நட்பு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இது அணிகளுக்கிடையேயான நட்புறவு மற்றும் நல்லெண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது. கடல்களிலிருந்து வயல்கள் வரை, குழுப்பணி மற்றும் நட்பின் உணர்வு கடற்படை நடவடிக்கைகளுக்கு அப்பால் மலபார் 2024-ன் உணர்வை எடுத்துக்காட்டியது. இந்திய உணவு வகைகளின் நல்ல சுவைகளுடன் கடற்படையினரிடையே கலாச்சார பரிச்சயத்தை மேம்படுத்துவதற்கான களத்தை அமைத்த மறக்கமுடியாத இந்திய உணவையும் குழுவினர் ருசித்தனர்.
மலபார் 2024 -ன் துறைமுக கட்டம் முடிவடையும் நிலையில், அக்டோபர் 14 முதல் திட்டமிடப்பட்டுள்ள வங்காள விரிகுடாவில் வரவிருக்கும் கடல் கட்டத்தில் அதிகபட்ச செயல்பாட்டு ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான உத்திகளில் கவனம் செலுத்துகின்றனர் பல்வேறு நிலைகளில் நடைபெற்ற பன்முக கலந்துரையாடல்கள் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல், நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளுதல், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
எம்.பிரபாகரன்