மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை சட்டத்தின் பிரிவு 139 இன் துணைப் பிரிவு (1) இன் கீழ் 2024, நவம்பர் 15 வரை நீட்டித்துள்ளது. இது சட்டத்தின் பிரிவு 139-ன் துணைப் பிரிவு (1) க்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள பிரிவு 2-ன் (ஏ) -ல் குறிப்பிடப்பட்ட மதிப்பீட்டாளர்களின் விஷயத்தில் 2024, அக்டோபர் 31 ஆகும்.
இது பற்றிய விவரம் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் 26.10.2024 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.13/2024-ல் உள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா