தேசிய ஒற்றுமை தினத்தன்று ஒற்றுமை மற்றும் அணுகலுக்கான உறுதிப்பாட்டை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான தேசிய ஒற்றுமை தினத்தன்று நாட்டை ஒருங்கிணைப்பதில் அவர் மேற்கொண்ட தொலைநோக்கு முயற்சிகளை கௌரவப்படுத்தும் வகையில்,  சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒன்றிணைந்து  நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு  சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு வும்லுன்மாங் வுல்னாம் தலைமை தாங்கினார். உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சக ஊழியர்கள் ராஜீவ் காந்தி பவனில் ஒன்றுகூடி ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மதிப்புகளை நிலைநிறுத்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

உறுதிமொழி விழாவைத் தொடர்ந்து, அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் கூட்டு முன்னேற்றத்திற்கான அமைச்சகத்தின் அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு அடையாளப்படுத்தியது.

பிராந்தியம், கலாச்சாரம் அல்லது மொழியைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு குடிமகனுக்கும் நாடு முழுவதும் குறைந்த கட்டண மற்றும் சிறந்த விமானப் பயணத்திற்கான சமமான அணுகலை உறுதி செய்வதன் மூலம் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதியாக உள்ளது.

Leave a Reply