மதுரை செல்லூர் கால்வாயிலிருந்து நீர் வெளியேற ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கால்வாய் !- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

மதுரையில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.30) ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.30) நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மதுரையில் வெள்ளபாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply