தஞ்சை பெரிய கோவில் விநாயகர் சன்னதியில் நாய் படுத்திருக்கும் அவலம்!
தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும், தஞ்சைப் பிரகதீசுவரர் கோவில் என்றும் அறியப்படும் தஞ்சை பெரிய கோவில், திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்திய கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.
இக்கோயில் தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
மராட்டா நுழைவுவாயில்
கேரளாந்தகன் திருவாசல்
இராசராசன் திருவாசல்
நந்தி மண்டபம்
வராகி சன்னதி
தெற்கு திருசுற்று மாளிகை
பிரகதீஸ்வரர் சன்னதி
பொருள் விளக்ககம்
விநாயகர் சன்னதி
கரூவூர் தேவர் சன்னதி
சுப்பிரமணியர் சன்னதி
சண்டிகேஸ்வரர் சன்னதி
வடக்கு திருசுற்று மாளிகை
அம்மன் சன்னதி
நடராசர் மண்டபம்–ஆகியவற்றை தன்னகத்தே உள்ளடக்கியது தான் இந்த தஞ்சை பெரிய கோயிலாகும்.. இதில் இங்குள்ள விநாயகர் சன்னதியில் விநாயகர் சிலைக்கு பக்கவாட்டில் நாய் ஒன்று (03/11/ 2024 ஞாயிற்றுக்கிழமை) படுத்து கிடந்தது. இது எத்தனை நாளாக அங்கு படுத்து இருக்கிறது என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. இதைக் கண்ட பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வேதனை அடைந்தனர். ஆன்மீகத்தின் அடையாளமாகவும், மிகப்பெரிய வரலாற்றுச் சின்னமாகவும், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கும் தஞ்சை பெரிய கோவிலின் பாதுகாப்பும், பராமரிப்பும் மற்றும் கண்காணிப்பும் தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.
விநாயகர் சன்னதிக்கு உள்ளயே நாய் படுத்திருப்பதை கூட கண்டுப்பிடிக்காத (அல்லது) கண்டுக்கொள்ளாத நிலை அலட்சியத்தின் உச்சக்கட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
இத்திருக்கோயில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையினரால் மேற்கொள்ளப்படுகிறது. தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் இந்து சமய அறநிலையத்துறையால் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும்போது இப்படிப்பட்ட அவலம் அங்கு எப்படி நடந்தது?!
சாமி சன்னதிகளுக்குள் நாய்கள் புகாத வண்ணம் ஒரு கம்பியிலான சிறிய கதவு கூடவா அமைக்க முடியாது? சாமி சன்னதிகளுக்கு உள்ளே செல்லும் தெருநாய்கள் அங்கு வரும் பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
நாய்களைக் கூட தடுத்து நிறுத்த முடியாதவர்கள் சமூக விரோதிகளையும்; குற்றப் பின்னணி கொண்டவர்களையும் எப்படி கண்டுபிடிப்பார்கள்?
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040