2024-2025 கரீஃப் சந்தைப் பருவத்தில் நவம்பர் 2 நிலவரப்படி, பஞ்சாபில்  85.41 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை இந்திய உணவுக் கழகமும்  மாநில முகமைகளும் கொள்முதல் செய்துள்ளன.

2024, நவம்பர் 2 நிலவரப்படி, மொத்தம் 90.69 லட்சம் மெட்ரிக் டன் நெல் பஞ்சாப் மண்டிகளுக்கு வந்துள்ளது.  இதில் 85.41லட்சம் மெட்ரிக் டன் மாநில முகமைகள் மற்றும் இந்திய உணவுக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முதல் ரக நெல்லுக்கு மத்திய அரசு தீர்மானித்தபடி ரூ .2320 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.  மேலும் நடப்பு 2024-25 கரீஃப் சந்தைப் பருவத்தில் இன்றுவரை அரசால் வாங்கப்பட்ட நெல்லின் மொத்த  மதிப்பு ரூ .19800 கோடியாகும். இதனால்  4 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.  4640 ஆலை உரிமையாளர்கள் நெல் அரைவைக்கு விண்ணப்பித்துள்ளனர். 4132 ஆலை உரிமையாளர்களுக்கு பஞ்சாப் மாநில அரசு பணி ஒதுக்கீடு செய்துள்ளது.

கரீஃப் சந்தைப் பருவம் 2024-25 க்கான நெல் கொள்முதல் பஞ்சாபில் 2024,  அக்டோபர் 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது.  விவசாயிகளிடமிருந்து சுமூகமாக கொள்முதல் செய்வதற்காக மாநிலம் முழுவதும் 2927 மண்டிகள் மற்றும் தற்காலிக களங்கள் செயல்பட்டு வருகின்றன. 2024-25-ம் ஆண்டிற்கான நெல் கொள்முதலுக்கு 185 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது, இது 30.11.2024 வரை தொடரும்.

செப்டம்பரில் பெய்த கனமழை மற்றும் நெல்லில் அதிக ஈரப்பதம் காரணமாக கொள்முதல் சற்று தாமதமாகத் தொடங்கினாலும், தற்போது மீண்டும் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.

Leave a Reply