தேசியத் தலைநகர் தில்லிப் பிரதேசத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் தணிக்கவும் தரப்படுத்தலுக்கான செயல் திட்டம் விதிக்கப்பட்ட பின் பல்வேறு முகமைகளால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளின் அமலாக்கம்.

தேசியத் தலைநகர் தில்லியிலும்  அருகிலுள்ள பகுதிகளிலும் காற்று தர மேலாண்மை ஆணையத்தால்  திருத்தப்பட்ட தரப்படுத்தலுக்கான செயல் திட்டத்தை 15.10.2024 முதல் செயல்படுத்துவதன் மூலம், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஆணையத்தில் தரப்படுத்தலுக்கான செயல் திட்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்தல்,  மாநிலங்களால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளை பின்தொடர்வதற்கும் கண்காணிப்பதற்கும், 15.10.2024 முதல் ஆணையத்தில் தரப்படுத்தலுக்கான செயல் திட்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தர மேலாண்மை ஆணைய உறுப்பினர்  தலைமையில் உள்ளது. கட்டுப்பாட்டு அறை மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நோடல் அதிகாரிகள் இடையே தகவல்களை சுமூகமாக பரிமாற்றுவதற்காக ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தேசியத் தலைநகர் தில்லி முழுவதும் 7000-க்கும் அதிகமான  கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்புத் தளங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  597 இணக்கமில்லா  தளங்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு  விதிக்கப்பட்டுள்ளது மற்றும் 56 தளங்களுக்கு மூடுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சாலை தூசியைக் கட்டுப்படுத்த சாலை துப்புரவு இயந்திரங்கள், நீர் தெளிப்பான்கள், புகை எதிர்ப்பு தண்ணீர் துப்பாக்கிகள் ஆகியவை வற்றை நிறுவுதல்: தில்லியில் மட்டும் தினமும் சராசரியாக 81 சாலை துப்புரவு இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன . ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச  சாலைகளில் இருந்து வரும் தூசி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தினமும் 36 சாலை துப்புரவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேசியத் தலைநகர் தில்லி முழுவதும் தினமும் சராசரியாக சுமார் 600 நீர் தெளிப்பான்கள் மற்றும் புகை எதிர்ப்பு தண்ணீர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 1400 தொழிற்சாலைகள் மற்றும் 1300 மின் உற்பத்திக்கான டீசல் என்ஜின்கள் ஆய்வு செய்யப்பட்டு, இணங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Leave a Reply