கல்வி ஒத்துழைப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இந்திய எஃகு ஆணைய நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்திய எஃகு ஆணைய நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரி இடையே 2024  நவம்பர் 04 அன்று, புதுதில்லியில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கல்வி ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தில் புதிதாக பதவி உயர்வு பெற்ற நிர்வாகிகளுக்கு அவரவர்களுக்கு ஏற்ற வகையில்  மேலாண்மை மேம்பாட்டு பயிற்சிகளை நடத்த உதவும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு என்பது இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் ஒட்டுமொத்த கற்றல் & மேம்பாட்டு உத்தியின் ஒரு அங்கமாகும். நிறுவன உயர் அதிகாரிகளுக்கு கூடுதலான கல்வி அனுபவத்தை வழங்குவதாகவும் தங்களின் தலைமைப் பதவிகளில் அவர்கள் மேலும் வளர்ச்சி அடையவும் இது உதவும்.

இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் இயக்குநர் (பணியாளர்) திரு கே.கே.சிங், ஹைதராபாத் இந்திய நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநர் டாக்டர் நிர்மால்யா பாக்சி ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Leave a Reply