பாரதம் தற்போது காலனிய மனப்பான்மையை தூக்கி எறிந்துவிட்டு, முந்தைய முக்கிய காலனிய சிந்தனைகளை புறந்தள்ளுகிறது!– குடியரசு துணைத்தலைவர்.

காலனிய மனப்பான்மையை பாரதம் விரைவாக தூக்கி எறிந்து வருகிறது என்றும் முந்தைய காலனிய சிந்தனைகள் மற்றும் சின்னங்களை தற்போது நாம் புறந்தள்ளி வருகிறோம் என்றும், இந்திய பொது நிர்வாகம் காலனிய மனப்பான்மையிலிருந்து விலகி, சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது விருப்பங்களுடன் ஒத்துப்போகும் வகையில் இந்திய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் கூறினார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய பொது நிர்வாகக் கழகப் பொதுக்குழுவின் 70-வது ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், இந்திய பொது நிர்வாகம், காலனிய ஆதிக்க மனப்பான்மையிலிருந்து விலகி, சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது விருப்பங்களுக்கு ஏற்ப இந்திய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒட்டுமொத்த பாதையைப் பாருங்கள், குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் நடந்து வந்த பாதையைப் பாருங்கள்.

நாம் இப்போது முந்தைய காலனி ஆதிக்க மனோபாவம் மற்றும் குறியீட்டுச் சின்னங்களை மறுக்கிறோம். ராஜ பாதை இப்போது மக்கள் பாதை மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலை லோக் கல்யாண் மார்க் என மாறியுள்ளது. ஒரு காலத்தில் ஜார்ஜ் மன்னரின் சிலை இருந்த விதானத்தில் இப்போது நேதாஜி நிற்கிறார். இந்திய கடற்படையின் சின்னம் நமது மூவர்ணக் கொடியை உள்ளடக்கியதாக மாற்றப்பட்டது. 1500 காலனித்துவ சகாப்த சட்டங்கள் இப்போது சட்டப் புத்தகத்தில் இல்லை.

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்) மற்றும் பாரதிய சாக்ஷய அதினியம் ஆகிய புதிய குற்றவியல் சட்டங்கள், இந்திய குற்றவியல் நீதி அமைப்பை காலனித்துவ பாரம்பரியத்திலிருந்து விடுவித்துள்ளன. ‘தண்ட்’ சன்ஹிதா இப்போது ‘நியாய’ சன்ஹிதாவாக மாறியிருப்பது ஒரு மகத்தான மற்றும் புரட்சிகரமான மாற்றமாகும், இது பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைப் பாதுகாப்பதை மேம்படுத்துகிறது;  வழக்குத் தொடுப்பதை திறம்பட மேற்கொள்ளச் செய்கிறது.  பல  காலனியாதிக்க மனநிலையை பாரதம் விரைவாக தூக்கி எறிந்து வருகிறது. இப்போது மருத்துவம் அல்லது தொழில்நுட்பம் கற்க ஆங்கிலம் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply