புதுதில்லியில் டிஜிட்டல் கடலோரக் காவல்படை திட்டத்தின் மூன்றாம் நிலை தரவு மையத்திற்கு இந்திய கடலோரக் காவல் படை அடிக்கல் நாட்டியது.

இந்திய கடலோர காவல்படையின்  துணை இயக்குநர் ஜெனரல் (கொள்கை மற்றும் திட்டங்கள்), இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆனந்த் பிரகாஷ் படோலா 2024 நவம்பர் 05, அன்று, புதுதில்லியின் மஹிபல்பூரில் டிஜிட்டல் கடலோர காவல்படை திட்டத்தின் 3-ம் நிலை தரவு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். சமீபத்திய தொழில்நுட்பத்துடன்  கூடிய டிஜிட்டல் கடலோரக் காவல் படை திட்டத்தின் 3-ம் நிலை தரவு மையமானது அனைத்து கணினி பயன்பாடுகள் மற்றும் முக்கிய தகவல் தொழில்நுட்ப வளங்களைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் செய்கின்ற முதன்மை மையமாக செயல்படும். இது இந்தியக் கடலோரக் காவல் படையின் நிர்வாக செயல்பாட்டிற்கு மிக  ஆதரவாக இருக்கும்.

இந்திய தொலைதொடர்பு ஆலோசனை  நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், புதுதில்லியில் அதிநவீன தரவு மையம், கர்நாடகாவின் நியூ மங்களூரில் ‘பேரிடர் மீட்பு தரவு மையம்’ மற்றும் கப்பல்கள் உள்ளிட்ட இந்தியக் கடலோரக் காவல்படை இடங்களுக்கு இடையே பான்-இந்தியா இணைப்பு மற்றும் ‘நிறுவன வள திட்டமிடல்’ பயன்பாட்டை செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

Leave a Reply