35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோவையில் மேலும் ஒரு ஐ.டி. பார்க்; விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்: கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

கோவையில் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மேலும் ஒரு ஐ.டி. பார்க் அமைக்கப்படும் என கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் மற்றும் அறிவியல் மையம் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில், கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் அருகே மத்திய சிறைக்கு சொந்தமான 6.9 ஏக்கர் காலியிடத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் மற்றும் அறிவியல் மையம் ரூ.300 கோடியில் 8 தளங்களுடன் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரஅடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது. தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். 

Leave a Reply