மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் மாநிலங்களில் சோதனை நடவடிக்கைகளின் போது தேர்தல் ஆணையம் ரூ.558 கோடி பறிமுதல்.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத்  தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் தீவிர வாகன சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் இதுவரை ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 558 கோடி மதிப்புள்ள ரொக்கம், இலவசங்கள், மதுபானங்கள், மருந்துகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் போன்றவற்றை தேர்தல் ஆணையத்தின் கீழ் உள்ள அமைப்புகள் பறிமுதல் செய்துள்ளன.

இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை, ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 280 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜார்க்கண்டில் இதுவரை ரூ.158 கோடி மதிப்புள்ள ரொக்கமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2019-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுடன் ஒப்பிடும்போது மகாராஷ்டிராவில் தற்போது ரூ.103.61 கோடியும், ஜார்க்கண்டில் ரூ.18.76 கோடியும் அதிக தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply