இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு இராணுவப் பயிற்சி ஆஸ்ட்ராஹிந்த் மகாராஷ்டிராவில் தொடங்கியது.

கூட்டு இராணுவப் பயிற்சியின் 3-வது பதிப்பு ஆஸ்த்ராஹிந்த் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று தொடங்கியது. இந்த பயிற்சி 2024 நவம்பர் 8 முதல் 21 வரை நடத்தப்படும். ஆஸ்த்ராஹிந்த் பயிற்சி என்பது இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இதே பயிற்சியின் கடைசி பதிப்பு ஆஸ்திரேலியாவில் 2023 டிசம்பரில் நடத்தப்பட்டது.

140 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில், முக்கியமாக டோக்ரா ரெஜிமெண்டின் ஒரு பட்டாலியன் மற்றும் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 14 வீரர்கள் இடம்பெறுவார்கள். 120 வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய இராணுவப் படைப்பிரிவு, 2வது படைப்பிரிவின் 10-வது அணியின் 13-வது இலகு குதிரை படைப்பிரிவால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.

ஐ.நா. உத்தரவின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ், அரை பாலைவன நிலப்பரப்பில் அரை நகர்ப்புற சூழலில் கூட்டு துணை மரபுவழி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதே ஆஸ்திரேலிய பயிற்சியின் நோக்கமாகும். இந்த பயிற்சி, அதிக அளவு உடல் தகுதி, கூட்டு திட்டமிடல் மற்றும் கூட்டு தந்திரோபாய பயிற்சிகளில் கவனம் செலுத்தும்.

இந்தப் பயிற்சி போர் சீரமைப்பு மற்றும் தந்திரோபாய பயிற்சி கட்டம் மற்றும் சரிபார்ப்பு கட்டம் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் –  பயிற்சியின் போது ஒத்திகை பார்க்கப்பட வேண்டிய பயிற்சிகள் / அம்சங்கள், வரையறுக்கப்பட்ட பிரதேசத்தைக் கைப்பற்றும் பயங்கரவாத நடவடிக்கைக்கான பதிலை உள்ளடக்கும். கூட்டு செயல்பாட்டு மையத்தை நிறுவுதல், தாக்குதல், தேடுதல் மற்றும் அழித்தல் போன்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்துதல், ஹெலிபேட் பாதுகாப்பு, ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆளில்லா விமான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு ஹெலி போர்ன் நடவடிக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துதல் ஆகும்.

தந்திரோபாய நடவடிக்கைகளை நடத்துவதற்கான தந்திரோபாயங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளில் இரு தரப்பினரும் தங்கள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள ஆஸ்த்ராஹிந்த் பயிற்சி உதவும். இந்த பயிற்சி இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே நல்லுறவையும், தோழமையையும் வளர்க்க உதவும்.

Leave a Reply