மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர்! முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் விபத்து!-திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபரீதம்.

மது போதையில் வாகனம் ஓட்டிய இளைஞர்.

போதை இளைஞர் ஒட்டி வந்த இரு சக்கர வாகனம்.

விபத்துக்குள்ளான நபர்.

விபத்துக்குள்ளான நபர் ஒட்டி வந்த இரு சக்கர வாகனம்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்திற்கும் பழைய பால் பண்ணைக்கும் இடையில் ரயில்வே மேம்பாலம் அருகே நேற்று மாலை ( 08.11.2024) 4.15 மணியளவில் நிலை கொள்ளாத மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர்; தனக்கு முன்னால் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் மீது மோதியதில் முன்னால் சென்ற இருசக்கர வாகன ஓட்டி நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் அவருக்கு முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் அடிபட்டது இதனால் அவர் மயங்கினார். தலைக்கவசம் (Helmet ) அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் தலை தப்பியது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய இளைஞருக்கும் முகம் மற்றும் கால் முட்டி பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது.

உடனடியாக108 -க்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் மயங்கிய நபரையும், விபத்துக்கு காரணமான அந்த போதை இளைஞரையும் அருகில் இருந்த நபர்களின் உதவியுடன் திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்துக்குள்ளான நபர் திருச்சி மாவட்டம்,, மண்ணச்சநல்லூர் வட்டம், துடையூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது நமது விசாரணையில் தெரிய வருகிறது.

விபத்துக்கு காரணமான அந்த போதை இளைஞர் யார்? எங்கிருந்து வந்தார்? அவர் ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் யாருடையது? என்ற தகவலை கூட சொல்ல முடியாத நிலையில் அந்த இளைஞர் மது போதையில் நிதானம் இல்லாமல் இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply