உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கான இந்தியாவின் தொலைத்தொடர்பு தொழில்நுட்பச் சூழலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் உள்ள ஒரு முன்னணி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான சி-டாட், லீனியரைஸ்டு ஆம்ப்ளிபையர் டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (டி.எஃப்) திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டம் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் வடிவமைப்பு, மேம்பாடு, வணிகமயமாக்கல் ஆகியவற்றுகு நிதி ஆதரவை வழங்குகிறது. இந்தியாவின் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மலிவு பிராட்பேண்ட், மொபைல் சேவைகளை செயல்படுத்துவதற்கான இந்திய அரசின் பணியின் ஒரு மைல்கல்லாக இது உள்ளது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் விழாவில் சி-டாட் இயக்குநர் டாக்டர் பங்கஜ் குமார் தலேலா, லினியரைஸ்டு ஆம்ப்ளிஃபையர் டெக்னாலஜி அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர்கள் திரு விவேக் சர்மா மற்றும் பேராசிரியர் கருண் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திவாஹர்