ஒடிசாவில் டிசம்பர் 04-ல் கடற்படை செயல்பாட்டு சாகச நிகழ்ச்சி – குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.

இந்த ஆண்டு கடற்படை தினமான டிசம்பர் 04 அன்று ஒடிசாவின் பூரியில் உள்ள ப்ளூ ஃபிளாக் கடற்கரையில் திட்டமிடப்பட்டுள்ள ‘செயல்பாட்டு பயிற்சி நிகழ்ச்சியில்’ (ஆப் டெமோ) இந்திய கடற்படை தனது வலிமையான கடல்சார் திறன்களையும் செயல்பாட்டு வலிமையையும் நிரூபிக்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக பங்கேற்க குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிகழ்வு கடற்படையின் பன்முக திறன்களை வெளிப்படுத்தும். மக்களிடையே கடல்சார் விழிப்புணர்வை மேம்படுத்தி, இந்தியாவின் வளமான கடல் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும்.

இந்த நிகழ்வை சுமூகமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக கடற்படை ஒடிசா மாநில அரசுடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. உள்ளூர் பார்வையாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடமளிக்கும் வகையில் இருக்கை ஏற்பாடுகள் செய்யப்படும். கடற்கரையில் இருந்து நேரடியாக காண வாய்ப்பு வழங்கப்படும். அத்துடன் இந்த நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்திய கடற்படையின் யூடியூப் சேனல் வழியாகவும் இது ஒளிபரப்பு செய்யப்படும்.

Leave a Reply