நாவிகா சாகர் பரிக்ரமா II என்று பெயரிடப்பட்ட உலகளாவிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வரும் இந்திய கடற்படை பாய்மரக் கப்பல் தாரிணி, கடலில் சவாலான 39 நாள் பயணத்திற்குப் பிறகு, இந்திய நேரப்படி, நவம்பர் 09 அன்று சுமார் 1430 மணிக்கு (1700 உள்ளூர் நேரம்) ஆஸ்திரேலியாவின் ஃப்ரெமாண்டில் முதல் துறைமுகத்தை அடைந்தது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை கோவாவில் இருந்து கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி அக்டோபர் 2ந்தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவாவிலிருந்து 4900 கடல் மைல் தொலைவைக் கப்பல் கடந்தது. 38 நாள் இடைவிடாத பயணத்தின் போது, இந்திய கடற்படை இரட்டையர்கள் லெப்டினன்ட் கமாண்டர் தில்னா கே மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் ரூபா ஆகியோர் சவாலான வானிலையை எதிர்கொண்டனர். பயணம் முழுவதும், குழுவினர் நல்ல ஆரோக்கியத்துடனும் அதிக உற்சாகத்துடனும் இருந்தனர், தீவிர நிலைமைகளை எதிர்கொள்வதில் ஆற்றலை நிரூபித்தனர்.
திவாஹர்