Dr. வி.வருண் குமார் IPS ., திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.
2011-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான Dr. வி.வருண் குமார், திருச்சி மாவட்டத்தின் 112 வது காவல் கண்காணிப்பாளராக 11.08.2023 வெள்ளிக்கிழமை அன்றுப் பொறுப்பேற்றார். திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் தங்கள் குறைகளை எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று சொன்னதோடு மட்டுமல்லாது; அதற்கான அலைபேசி எண்ணையும் (94874 64651) அவர் வெளியிட்டார்.
கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாக மிரட்டினாலோ அவற்றை ஆடியோ, வீடியோ, CCTV ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், அவர்களின் உதவி எண்.97874 64651 என்றஎண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுறது.
காத்தான் என்கின்ற காத்த பிள்ளை.
கட்டப்பஞ்சாயத்து அடியாட்களை வைத்து மிரட்டல் போலி ஆவணம் தயாரித்து ஏழை எளிய விளிம்பு நிலை மக்களை மிரட்டி நில அபகரித்தல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு ஆகிய குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் லால்குடி பகுதியைச் சேர்ந்த காத்தான் என்கின்ற காத்த பிள்ளை அவரது மகன் தினேஷ் பாபு ஆகியோர் மீதும் இவர்களுக்கு வலது கரமாக செயல்பட்டு வரும் இவரது ஆதரவாளர்கள் மீதும் இவர்களின் குற்ற செயலுக்கு உடந்தையாக இருக்கும் வருவாய் துறை, பத்திர பதிவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதும் பல்வேறு புகார்கள் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் அவர்களிடம் குவிந்த வண்ணம் உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண் குமார் உத்தரவின் பேரில் ஆப்ரேஷன் அகழி என்ற பெயரில் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டதில் ஏராளமான சொத்து பத்திரங்களும் வங்கி கணக்கு புத்தகங்களும் பூர்த்தி செய்யப்படாத வங்கி காசோலைகளும் கடன் பத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.
காத்தான் மகன் தினேஷ் பாபு.
கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமார்.
இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டம் செவ்வந்தி நாதபுரம் வருவாய் எல்லைக்கு உட்பட்ட மயில் அரங்கம் கிராமத்தில் வசிக்கும் குழந்தைசாமி என்பவரின் மகன் பாஸ்கர் என்பவர் தனது தாத்தா மற்றும் அப்பா காலத்திலிருந்து மூன்று தலைமுறைக்கு மேல் பரம்பரை பரம்பரையாக சாகுபடி செய்து வரும் நிலத்தை அபகரிக்க வேண்டும் என்று கேட்ட நோக்கத்தோடு லால்குடியைச் சேர்ந்த காத்தான் என்கிற காத்த பிள்ளை மற்றும் அவரது மகன் தினேஷ் பாபு கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமார் ஆகியோர் மீதும் உண்மையை மறைத்து நிலத்தை மோசடி ஆவணம் மூலம் விற்பனை செய்த சென்னையைச் சேர்ந்த வைத்தியநாத ஐயரின் பேரன்கள் பாலகிருஷ்ணன் வரதராஜன் சூரிய நாராயணன் சுவாமிநாதன் ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வருண் குமார் அவர்களிடம் நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் காத்தான் என்கிற காத்த பிள்ளை அவரது மகன் தினேஷ் பாபு ஆகியோர் மீது லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-கே.பி.சுகுமார்., B.E.,
Special Correspondent, UTL MEDIA TEAM
-ராஜா ராம்.