உலகின் 5-வது பெரிய நிலக்கரி இருப்புக்களைக் கொண்ட இந்தியா, விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் உத்வேகம் பெற்று நிலக்கரி உற்பத்தியில் 2-வது பெரிய நுகர்வோராக உள்ளது. எனினும், தற்போதைய நுகர்வு நிலப்பரப்பு இறக்குமதிக்கான ஒரு முக்கியமான தேவையை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக கோக்கிங் நிலக்கரி மற்றும் உயர்தர வெப்ப நிலக்கரி, உள்நாட்டு இருப்புகளுக்குள் போதுமான அளவு கிடைக்கவில்லை. இந்த பற்றாக்குறை எஃகு உள்ளிட்ட முக்கிய தொழில்களுக்காக இறக்குமதியை அவசியமாக்குகிறது.
2024-25-ம் நிதியாண்டின் ஏப்ரல் – ஆகஸ்ட் காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 2.2% அதிகரித்து, முந்தைய ஆண்டில் 108.81 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 111.20 மில்லியன் டன்களை எட்டியது. இருப்பினும், ஒழுங்குபடுத்தப்படாத துறைகள் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் – ஆகஸ்ட் காலகட்டத்தில் 10.3% குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டன.
கடந்த ஆண்டு இதே காலகட்டதுடன் ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியில் 4.97% குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்தபோதிலும், கலப்பு நோக்கங்களுக்கான இறக்குமதி கடந்த ஆண்டு 10.70 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் தற்போது 9.79 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. இது 8.5% சரிவைக் குறிக்கிறது.
இந்த சரிவு நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கும், இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் இந்தியாவின் உறுதியான உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது.
மேலும், 2024 ஏப்ரல் – செப்டம்பர் காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி சிறப்பான அதிகரிப்பைக் கண்டது. 2023-24-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 428.21 மெட்ரிக் டன்னுடன் ஒப்பிடும்போது 453 மெட்ரிக் டன்னை எட்டியது. இது 5.79% வளர்ச்சியைக் குறிக்கிறது.
இருப்பினும், மதிப்பு அடிப்படையில், 2024-25 ஏப்ரல் – ஆகஸ்ட் மாதங்களில் ஒட்டுமொத்த இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை ரூ.120,532.21 கோடியாக உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு (2023-24) இதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை ரூ.133,461.65 கோடியாக இருந்தது. இதன் விளைவாக ரூ.12,929.44 கோடி சேமிக்கப்படுகிறது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மதிப்பு அடிப்படையில் சுமார் 9.69% சேமிப்பாகும்.
திவாஹர்