ரஷ்ய வேளாண் துணை அமைச்சர் திரு மாக்சிம் டிடோவ் தலைமையிலான தூதுக்குழு 2024 நவம்பர் 11 அன்று நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திருமதி நிதி கரேவை சந்தித்து பருப்பு வகைகள் வர்த்தகத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தது. அண்மைக் காலமாக இந்தியாவின் மசூர் (பயறு) மற்றும் மஞ்சள் பட்டாணி இறக்குமதியின் முக்கிய ஆதாரமாக ரஷ்யா திகழ்கிறது. இந்த இரண்டு பருப்பு வகைகளைத் தவிர, ரஷ்யா தனது பருப்பு வகைகளின் உற்பத்தியை உளுந்து மற்றும் துவரை என பன்முகப்படுத்த ஆலோசித்து வருகிறது.
துவரம் பருப்பு, உளுந்து மற்றும் கொண்டைக்கடலை போன்ற முக்கிய பருப்பு வகைகளின் விநியோக சூழல் படிப்படியாக 2024-ம் ஆண்டு ஜூலை முதல் நடைபெற்று வருகிறது. காரீஃப் வாய்ப்பு மற்றும் தொடர்ச்சியான இறக்குமதிகளால் இது நடைபெற்று வருகிறது. துவரம் பருப்பு பயிர் நன்றாக இருப்பதாகவும், கர்நாடகாவின் சில பகுதிகளில் துவரம் பருப்பு பயிரின் ஆரம்ப அறுவடை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு துவரம் பருப்பு, உளுந்து, கொண்டைக்கடலை மற்றும் மஞ்சள் பட்டாணி ஆகியவற்றின் இறக்குமதியால் பருப்பு வகைகள் கிடைப்பது எளிதாக உள்ளது. நடப்பாண்டிற்கான துவரம் பருப்பு மற்றும் உளுந்து இறக்குமதி முறையே 10 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் 6.40 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். நவம்பர் முதல் வாரத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டின் முழு ஆண்டு இறக்குமதி புள்ளி விவரங்களை விட அதிகமாக உள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து மொத்த சரக்குகளில் கொண்டைக்கடலை இறக்குமதியின் வருகை நவம்பர் முதல் எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பிரபாகரன்