தற்போதைய காலகட்டத்தில் விரைவாக மாறிவரும் உலகில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள நாட்டில் ‘மாற்றத்தக்க பாதுகாப்பை’ உருவாக்குவதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதிப்பாட்டிற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆதரவு அளித்துள்ளார். 2024 நவம்பர் 12, அன்று புதுதில்லியில் ‘மாற்றத்தக்க பாதுகாப்பு: நவீன போரின் மாறிவரும் நடவடிக்கைகளை வழிநடத்துதல்’ என்ற கருப்பொருளில் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த தில்லி பாதுகாப்பு உரையாடலில் அவர் தொடக்க உரையாற்றினார்.
”மாற்றத்தக்க பாதுகாப்பு’ என்பது ஒரு உத்திசார்ந்த அணுகுமுறை என்று கூறிய அவர், ஒரு நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்கொள்ள இத்தகைய முறை தொடர்ந்து உருவாகின்றன என்று கூறினார். ”மாற்றத்தக்க பாதுகாப்பு’ என்பது என்ன நடந்தது என்பதற்கு பதிலளிப்பது மட்டுமல்லாமல், என்ன நடக்கக்கூடும் என்பதை எதிர்பார்ப்பதும், அதற்கு முன்கூட்டியே தயாராவதும் என்று அவர் தெரிவித்தார்.
‘மாற்றத்தக்க பாதுகாப்பு’ என்பது வெறும் உத்திசார்ந்த தேர்வு மட்டுமல்ல, அது தேவையும் கூட என்று அவர் குறிப்பிட்டார். நமது நாட்டிற்கான அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளதால், நமது பாதுகாப்பு அமைப்புகளும் உத்திகளும் உருவாக வேண்டும். எதிர்கால அனைத்து தற்செயல்களுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இது நமது எல்லைகளைப் பாதுகாப்பது மட்டுமல்ல. இது நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பது பற்றியது என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
திவாஹர்