பயிற்சி துறையில் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கு” மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பயிற்சித் துறையில் வெளிப்படைத்தன்மையை பராமரிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) பயிற்சி துறையில் தவறான விளம்பரங்களின் சிக்கலைத் தீர்க்க விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

‘பயிற்சித் துறையில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள், 2024’, பயிற்சி மையங்களால் பொதுவாக பயன்படுத்தப்படும் ஏமாற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறைகளிலிருந்து மாணவர்களையும் பொதுமக்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சிசிபிஏ தலைமை ஆணையரும் இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் செயலாளருமான திருமதி நிதி கரே இன்று செய்தியாளர்களுடன் கலந்துரையாடுகையில் தெரிவித்தார்.

பயிற்சி துறையில் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து, ஆணையத்தின் அப்போதைய தலைமை ஆணையர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. மேலும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, கல்வி அமைச்சகம், லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி (சிறப்பு அழைப்பாளராக), தில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகம், சட்ட நிறுவனம் மற்றும் தொழில் பங்குதாரர்கள் இதில் இடம் பெற்றிருந்தனர்.

பயிற்சி துறையில் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களுடன் சி.சி.பி.ஏ வர வேண்டும் என்று குழு உறுப்பினர்களிடையே பொதுவான ஒருமித்த கருத்து இருந்தது. போதுமான விவாதங்களுக்குப் பிறகு, குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்தது. குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சிசிபிஏ வரைவு வழிகாட்டுதல்களை கடந்த பிப்ரவரி 16-ந் தேதி பொதுமக்களின் கருத்துக்களுக்காக வெளியிட்டது. கல்வி அமைச்சகம், இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட் பிரைவேட் லிமிடெட், இந்தியா எட்டெக் கூட்டமைப்பு மற்றும் இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் (ஐஏஎம்ஏஐ), ஃபிட்ஜேஇஇ, கேரியர் 360 பயிற்சி தளம், மனித மற்றும் உலகளாவிய சீர்திருத்தங்களுக்கான சிராவுரி ஆராய்ச்சி அறக்கட்டளை, சிவிக் கண்டுபிடிப்பு அறக்கட்டளை, வாத்வானி அறக்கட்டளை மற்றும் நுகர்வோர் கல்வி, ஆராய்ச்சி மையம் (சிஇஆர்சி) உள்ளிட்ட 28 பங்குதாரர்களிடமிருந்து பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டன. இதனடிப்படையில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply