டாக்டர் மன்சுக் மாண்டவியா இந்தியாவின் நாடா ஏஜென்சியின் ‘உங்கள் மருந்தை அறிந்து கொள்ளுங்கள்’ செயலியை பிரபலப்படுத்தும் முயற்சியைத் தொடங்கி வைத்தார்.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, விளையாட்டுகளில் ஊக்கமருந்துக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த நாடு தழுவிய வேண்டுகோளைத் தொடங்கியுள்ளார். விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் முழு விளையாட்டு சமூகமும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (நாடா) இந்தியாவின் ‘உங்கள் மருந்தை அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.எம்)’ செயலியைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்த புதுமையான செயலி விளையாட்டு வீரர்களுக்கு மருந்துகளின் முக்கியமான தகவல்களுடன் அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, கவனக்குறைவாக ஊக்கமருந்து பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் நியாயமான விளையாட்டைப் பராமரிக்கவும் இது உதவுகிறது.

டாக்டர் மாண்டவியா தமது செய்தியில், விளையாட்டில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், “நமது விளையாட்டு வீரர்கள் தேசத்தின் பெருமை, மேலும் சுத்தமான மற்றும் நியாயமான போட்டியை ஆதரிக்கும் கருவிகளை அவர்கள் அணுகுவது அவசியம். கவனக்குறைவாக ஊக்கமருந்து பயன்படுத்துவதை அகற்றவும், நியாயமான மற்றும் வெளிப்படையான விளையாட்டு கலாச்சாரத்திற்கு பங்களிக்கவும் அனைத்து விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வல்லுநர்களை கே.ஒய்.எம் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த நான் ஊக்குவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஊக்கமருந்து எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் கல்வியை உயர்த்துவதற்கான நாடா ஏஜென்சியின் பரந்துபட்ட பணியின் ஒரு பகுதியாகும், இது விளையாட்டு வீரர்கள் சுத்தமாக ஊக்கமருந்தை நாடாமல் இருப்பதற்கு  தேவையான அத்தியாவசிய தகவல்களுடன் தயார்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட மருந்து அல்லது அதன் பொருட்களில் உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் தடைசெய்துள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் பொருட்கள் உள்ளதா என்பதை பயனர்கள் எளிதாக சரிபார்க்க இந்த செயலி  பயன்பாடு அனுமதிக்கிறது. இந்த விரைவான மற்றும் தடையற்ற சரிபார்ப்பை வழங்குவதன் மூலம், கே ஒய் எம்  பயன்பாடு விளையாட்டு வீரர்களுக்கு தகவலறிந்து இருக்கவும், விளையாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தவும் உதவுகிறது, நியாயமான மற்றும் நெறிமுறை விளையாட்டுத்திறனின் கலாச்சாரத்தை வளர்க்கிறது.

Leave a Reply