ஜார்க்கண்டில் மாலை 5 மணி நிலவரப்படி 67.59% வாக்குகள் பதிவாகியுள்ளன, இது 2019 சட்டப்பேரவைத் தேர்தலின் போது இந்த சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான 67.04% வாக்குகளை விட அதிகமாகும். மாலை 5 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் 58.22% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்களிப்பதை எளிதாக்குவதற்கான ஆணையத்தின் பல நடவடிக்கைகள் மற்றும் ஊக்கமளிக்கும் பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், மாநிலத்தில் மும்பை, புனே மற்றும் தானே போன்ற நகரங்களில் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகின. பங்கேற்பின் மோசமான பதிவைத் தொடர்ந்தனர். மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 2-ம் கட்டமாக 38 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று அமைதியாக நடந்து முடிந்தது.
15 மாநிலங்களில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 1 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
இன்றிரவு 23:45 மணிக்கு வாக்குப்பதிவு குறித்த மற்றொரு புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை 2024 நவம்பர் 23 அன்று நடைபெறவுள்ளது.
திவாஹர்