சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள பிராந்திய சமூக பாதுகாப்பு மன்றத்தில் சர்வதேச சமூகப் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டாக்டர் முகமது அஸ்மான் ஆசிய பசிபிக் 2024-க்கான சர்வதேச சமூக பாதுகாப்பு கூட்டமைப்பின் சிறந்த நடைமுறை விருதை இந்தியாவுக்கு வழங்கினார்.
தகவல் தொடர்பு அலைவரிசைகள், மின்-நடவடிக்கைகளுக்கான ஐந்து தகுதிச் சான்றிதழ்களை தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பெற்றது. நீதி வழங்கலில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த வழக்கு, மாபெரும் மாவட்ட மக்கள் தொடர்பு திட்டம், பன்மொழி அழைப்பு மையங்கள் ஆகியவை முக்கியமானவை ஆகும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பில் தலைமை இயக்குநர் திரு. அசோக் குமார் சிங் இந்த விருதுகளை பெற்றுக் கொண்டார்.
மாறிவரும் பொருளாதார மற்றும் சமூக சூழலுக்கு ஏற்ப சீர்திருத்தங்களையும் நடைமுறைகளையும் பின்பற்ற தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு மேற்கொண்ட முயற்சிகளை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன. இந்த சர்வதேச அங்கீகாரம் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு குழுவை அதன் உறுப்பினர்களின் சேவைக்காக மேலும் கடுமையாக உழைக்க ஊக்குவிக்கும்.
எஸ்.சதிஸ் சர்மா