செயல்பாட்டில் இல்லாத நிலக்கரி சுரங்கங்களில் மீண்டும் உற்பத்தி.

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலக்கரி படிமங்கள் எதுவும் இல்லாத நிலையிலும் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரித்து அதன் இறக்குமதியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய  அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் நிலக்கரித் தேவையில் பெரும்பகுதி உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகம் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.  நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் பின்வருமாறு:

1.    நிலக்கரி சுரங்கங்களை மேம்படுத்துவதன் மூலம் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கச் செய்வது.

2.    சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2021-ன்படி சுரங்கங்களுடன் இணைக்கப்பட்ட உற்பத்தி ஆலையின் தேவையை பூர்த்தி செய்த பின்னர்  வருடாந்திர கனிம உற்பத்தியில் (நிலக்கரி உட்பட) 50% வரை வெளிச்சந்தையில் விற்பனை  செய்வதற்கு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2021-ல் ஏற்பாடு செய்தல்.

3.    நிலக்கரி சுரங்கங்களின் செயல்பாட்டை விரைவுபடுத்த அத்துறைக்கான ஒற்றைச் சாளர இணையதள வசதி.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Leave a Reply