தற்போதுள்ள 6ஜி தொழில்நுட்பம் சர்வதேச அளவில் தொடக்க நிலையில் உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் வரும் 2030-ம் ஆண்டுக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 மார்ச் 23 அன்று இந்தியாவின் 6ஜி தொழில்நுட்பம் குறித்து பாரத் 6ஜி தொலைநோக்குப் பார்வை ஆவணத்தை பிரதமர் வெளியிட்டார். இது 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு, மேம்பாடு போன்ற அம்சங்களில் இந்தியா முன்னணி நாடாக திகழும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரத் 6ஜி தொலைநோக்குப் பார்வை ஆவணத்தில் குறைந்த செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைத் தொடர்பு சேவைகள் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மேலும், இந்த ஆவணத்தின் படி செயல் திட்டத்தை உருவாக்குவதற்கு உள்நாட்டு தொழில்துறை நிபுணர்கள், கல்வியாளர்கள், தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள், தர நிர்ணய அமைப்புகள் ஆகியவற்றின் துணையுடன் ‘பாரத் 6 ஜி கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்