ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ‘ஓராண்டு முடிவில் முன்னேற்றம்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.

ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டு நிறைவையொட்டி கொண்டாடப்பட்ட “ஓராண்டு முடிவில் முன்னேற்றம்” நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ராஜஸ்தான் அரசுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்கு புதிய திசை காட்டுவற்கும் வேகத்தை அதிகரிப்பதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை திரு மோடி பாராட்டினார். முதலாம் ஆண்டு வரவிருக்கும் பல ஆண்டு வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சி அரசின் ஓராண்டு நிறைவைக் குறிப்பது மட்டுமின்றி, ராஜஸ்தானின் பிரகாசமான ஒளியையும் ராஜஸ்தானின் வளர்ச்சித் திருவிழாவையும் அடையாளப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தான் எழுச்சி உச்சி மாநாடு 2024-க்கு அண்மையில் தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த திரு மோடி, உலகெங்கிலும் உள்ள பல முதலீட்டாளர்கள் அதில் கலந்து கொண்டதாகவும், இன்று ரூ .45,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் ராஜஸ்தானில் தண்ணீர் தொடர்பாக எதிர்கொள்ளும் தடைகளுக்கு பொருத்தமான தீர்வை வழங்கும் என்றும், இந்தியாவுடன் மிகவும் நன்கு இணைக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானை மாற்றும் என்றும் அவர் கூறினார். இந்த வளர்ச்சிப் பணிகள் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும், ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும், சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும். ராஜஸ்தானின் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மத்திய, மாநில அரசுகள் இன்று நல்லாட்சியின் அடையாளமாக மாறி வருகின்றன என்று திரு மோடி கூறினார். மக்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதை தங்கள் அரசு உறுதி செய்யும் என்று அவர் மேலும் கூறினார். இன்று, நல்லாட்சிக்கான உத்தரவாதத்தின் அடையாளமாக தமது கட்சி இருப்பதாக மக்கள் கருதுவதாகவும், அதனால்தான் பல மாநிலங்களில் பொதுமக்களின் ஆதரவு கிடைப்பதாகவும் அவர் மேலும் கூறினார். தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், கடந்த 60 ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை ஒரே கட்சி மத்திய அரசை அமைக்கும் முன்னுதாரணம் இல்லை என்று கூறினார். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் தொடர்ந்து இரண்டு முறை தங்களைத் தேர்ந்தெடுத்து மக்கள் அளித்த ஆதரவுக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார், இது அவர்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்ததற்காக திரு. பைரோன் சிங் ஷெகாவத் தலைமையிலான ராஜஸ்தானின் முந்தைய அரசுகளுக்கும், நல்லாட்சியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்றதற்காக திருமதி வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கும்  நன்றி தெரிவித்த திரு மோடி, திரு. பஜன்லால் சர்மாவின் தற்போதைய அரசு நல்ல நிர்வாகத்தின் பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார். கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் இதன் பலனைக் காட்டுகின்றன என்றும் அவர் கூறினார். கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறிய திரு மோடி, ஏழைக் குடும்பங்கள், பெண்கள், தொழிலாளர்கள், விஸ்வகர்மாக்கள் மற்றும் நாடோடி பழங்குடியினர் ஆகியோரின் வளர்ச்சிக்காக பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பு மோசடிகள் போன்ற குறைபாடுகள் முந்தைய அரசின் அடையாளமாக இருப்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது பிரச்சினைகளை தீர்க்கும் செயல்முறையை தற்போதைய அரசு செய்து வருவதாகவும் கூறினார். கடந்த ஓராண்டில் தற்போதைய ராஜஸ்தான் அரசு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். வேலைத் தேர்வுகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுவதாகவும், அவ்வாறே நியமனங்களும் செய்யப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். முந்தைய ஆட்சிகளின் போது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ராஜஸ்தான் மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். தற்போதைய ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையில் மக்கள் நிவாரணம் பெற்றுள்ளனர். பிரதமரின் கிசான் வெகுமதி நிதித் திட்டத்தின் மூலம் மத்திய அரசு நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைக்கிறது என்றும், ராஜஸ்தான் மாநில அரசு விவசாயிகளுக்கு ஆதரவளிக்க கூடுதல் நிதியைச் சேர்க்கிறது என்றும் திரு மோடி கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவதன் மூலம் உள்கட்டமைப்புத் திட்டங்களை களத்தில் விரைவாக செயல்படுத்தி வருவதாகவும், இன்றைய திட்டம் இந்த உறுதிப்பாட்டின் குறிப்பிடத்தக்க பகுதியாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Leave a Reply