சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருட்கள், தங்கம் ஆகியவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரில் இருந்து கடந்த 7 ம் தேதி விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய கென்ய நாட்டு பெண் பயணி ஒருவரை, விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது அந்த பெண் 14 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,424 கிராம் எடைகொண்ட கொக்கைன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

13 ம் தேதி அன்று பாங்காக்கில் இருந்து சென்னை வந்திறங்கிய ஆண்  பயணி ஒருவரின் பையை சோதனையிட்டபோது, 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7.6  கிலோ  எடையிலான கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.  பின்னர் அவரை சுங்கத் துறையினர் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கடந்த டிசம்பர் 15 ம் தேதி  அன்று துபாயில் இருந்து, சென்னை வந்திறங்கிய  விமானத்தின் ஊழியர் மற்றும் பயணி ஒருவரை, சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.  அப்போது தான் வைத்திருந்த தங்கத்தை விமான ஊழியரிடம் அளித்துள்ளதாக பயணி ஒப்புக்கொண்டார்.  பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விமான ஊழியர் 1.7 கிலோ கிராம்  எடைகொண்ட தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்துவைத்து இருந்தது கண்டறியப்பட்டது.  இதையடுத்து விமான ஊழியர், பயணி ஆகிய இருவரையும் கைதுசெய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply