அந்தமான், நிக்கோபாரில் உள்ள தீவுகளுக்கு நமது நாயகர்களின் பெயர்களை சூட்டுவது, அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூர்வதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். தங்களின் வேர்களோடு இணைந்திருக்கும் நாடுகள், வளர்ச்சியிலும் தேச நிர்மாணத்திலும் முன்னேறிச் செல்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ஷிவ் அரூரின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“அந்தமான், நிக்கோபாரில் உள்ள தீவுகளுக்கு நமது நாயகர்களின் பெயர்களை சூட்டுவது, அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூர்வதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும். நமது தேசத்தில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புகழ்பெற்ற ஆளுமைகளின் நினைவைப் பாதுகாத்து கொண்டாடுவதற்கான எங்களது பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கள் வேர்களுடன் இணைந்திருக்கும் நாடுகள்தான் வளர்ச்சியிலும் தேச நிர்மாணத்திலும் முன்னேறுகின்றன.
எம்.பிரபாகரன்