தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் 195-வது கூட்டத்திற்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.

புதுதில்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் இன்று நடைபெற்ற தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் 195-வது கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரண்ட்லஜேவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

2023-24 நிதியாண்டிற்கான தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தின் தணிக்கை செய்யப்பட்ட வருடாந்திர கணக்குகள் மற்றும் ஆண்டு அறிக்கை.

2023-24-ம் ஆண்டிற்கான கழகத்தின் வருடாந்திர கணக்குகள், சிஏஜி அறிக்கை மற்றும் 2023-24-ம் ஆண்டிற்கான தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் அதன் பகுப்பாய்வு ஆகியவற்றுக்கு  ஒப்புதல் அளித்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2024-25 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடு, 2025-2026 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகள் மற்றும் 2025-2026-ம் ஆண்டிற்கான செயல்திறன் ஒதுக்கீடு ஆகியவற்றுக்கும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதித் திட்டங்கள் நிறுவனத்தின் திட்டமிடப்பட்ட செலவினம், நிதி ஒதுக்கீடு மற்றும் வரவிருக்கும் காலங்களுக்கான செயல்திறன் இலக்குகளை சுட்டிக்காட்டுகின்றன.

Leave a Reply