நிலக்கரி இறக்குமதி குறைப்பு!

உலகளவில் நிலக்கரி உற்பத்தியில்  ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா இருந்தபோதிலும் சில குறிப்பிட்ட வகை  நிலக்கரிகளைப் பொறுத்து குறிப்பாக கோக்கிங் நிலக்கரி, உயர்தர அனல்மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஆகியவற்றில் பற்றாக்குறை உள்ளது. நிலக்கரி விநியோகத்தில் உள்ள இந்த இடைவெளி காரணமாக எஃகு உற்பத்தி உட்பட முக்கிய தொழில்களை பாதுகாக்கவும், அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யவும் நிலக்கரி இறக்குமதி அவசியமாகிறது.

2024-25 ம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 3.1% குறைந்து, 149.39 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில்  154.17 மில்லியன் டன்னாக இருந்தது. முறைசாரா துறைகள் (மின்சாரம் தவிர) கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2024 ஏப்ரல்-அக்டோபர் வரையிலான  காலகட்டத்தில் 8.8% வீழ்ச்சியைக் கண்டன.

ஏப்ரல் 2024 முதல் அக்டோபர் 2024 வரை நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தியில் 3.87% அளவுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்தபோதிலும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அனல் மின் நிலையங்களால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் அளவு  19.5% என்ற அளவில் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த சரிவு நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கும், இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலைமையைக் குறைப்பதற்கும் நாட்டின் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.  அனல்மின் உற்பத்திக்கான நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பதற்கு காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை மட்டுமே பயன்படுத்தும் வகையில் ஆலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதே ஆகும்.

Leave a Reply