பொது சுகாதாரத்திற்கான சித்த மருத்துவம் என்ற கருப்பொருளில் 8 வது சித்த தினம் 19 டிசம்பர் 2024 அன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கில் கொண்டாடப்பட்டது, இவ்விழாவை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழ்நாட்டின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரை நிகழ்த்தினார். கல்வி மற்றும் சிறு அறிவியல் ஆராய்ச்சி திட்டங்களில் சாதனை படைத்த பெண் சித்த மருத்துவர்களை அவர் பாராட்டினார்., கோவிட் பெருந்தொற்றுக்கான தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறைக்கான மருந்தாக கபசுர குடிநீரைச் சேர்த்ததற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். சித்தாவில் உள்ள இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளம் தலைமுறையினரை வலியுறுத்தினார். ஆயுஷ் மருத்துவ முறைகளின் பயன்களைப் பெற 22 செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும், சித்த மருத்துவ கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அவர் தெரிவித்தார். நாட்டில் கிட்டத்தட்ட 900-க்கும் மேற்பட்ட ஆயுஷ் புத்தொழில் நிறுவனங்கள் செயல்படுவதாகவும் இத்துறை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுஷ் மருத்துவ முறைகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. இது ஆயுஷ் துறையின், பொற்காலம் என்றும் வளர்ந்து வரும் சித்த மருத்துவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சித்த மற்றும் தேசிய ஆயுஷ் இயக்கத்தின் வளர்ச்சியில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆகியவற்றின் பங்களிப்பை அவர் பாராட்டினார். மேலும் தேசிய சுகாதார அமைப்பிற்காக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் உருவாக்கிய ஆயுஷ் ஹெல்த் மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் (A-HMIS) பணியை வெகுவாக பாராட்டினார்.
பின்பு காணொலிக் காட்சி வாயிலாக மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் அவர்கள் கூறுகையில், சித்தா தினத்தை ஏற்பாடு செய்ததற்காக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் மற்றும் பேராசிரியர் NJ முத்துக்குமார் DG CCRS மற்றும் CCRS குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். சித்தாவின் பல்வேறு அம்சங்கள் மற்றும் நவீன மேம்பாடுகளின் பரவலான புழக்கத்திற்காக சித்தா கண்காட்சியைத் திட்டமிடுவதற்கு அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆரோக்கியத்திற்கு இந்த முறை பங்களிக்கும் வகையில், சித்தர் தினத்தை கொண்டாடுவதன் மூலம் பண்டைய சித்த மருத்துவ முறையை நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். 8வது சித்தர் தின விழா சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய மருத்துவ முறைகளுக்காக தனி அமைச்சகம் உருவாக்கியிருப்பதை நினைவு கூர்ந்தார். இந்திய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க கடந்த எட்டு ஆண்டுகளில் ஆயுஷ் அமைச்சகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பெருந்தொற்று காலத்தில் மக்களின் கோவிட்-19 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவ முறைகள் மிகுந்த பயன் அளித்ததாக அவர் குறிப்பிட்டார். தேசிய ஆயுஷ் இயக்கத்தை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.
திவாஹர்